வங்கதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு இந்தியா தான் காரணம் என வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.

வங்கதேசத்தின் கிழக்கு எல்லை மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு இந்தியாவே காரணம் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னறிவிப்பின்றி திரிபுரா மாநிலத்தில் உள்ள தாம்பூர் அணையை இரவோடு இரவாக திறந்துவிட்டதே வெள்ளத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில், வங்கதேச ஊடகங்கள் கூறிய குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திரிபுராவில் கும்டி ஆற்றின் மேல் பகுதியில் உள்ள தாம்பூர் அணை திறக்கப்பட்டது வங்கதேசத்தில் பரவலான கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது உண்மையல்ல. கும்டி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதுவே வெள்ளப்பெருக்கிற்கு முதன்மைக் காரணம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Facebook Comments Box