ஹமாஸ் முற்றிலுமாக அழிக்கப்படும் வரை தாக்குதல் தொடரும்… இஸ்ரேல்… பலி எண்ணிக்கை 40,265 ஆக உயர்வு

0

ஹமாஸ் முற்றிலும் அழிக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் – காசா போர் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்தப் போரில் இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். எனவே இந்தப் போரை நிறுத்துமாறு பல உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் காஸாவில் பதுங்கியிருக்கும் ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக அழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார். காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40,265 ஆக உயர்ந்துள்ளது.

அதிகாரிகள் கூறியதாவது:

டெய்ர் அல்-பாலா மற்றும் கான் யூனிஸ் ஆகிய தெற்கு நகரங்களில் இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற இந்த தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதனுடன் காசா பகுதியில் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40,265 ஆக அதிகரித்துள்ளது. இது தவிர, இஸ்ரேலிய குண்டுவீச்சில் இதுவரை 93,144 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here