பிரிக்ஸ் மாநாட்டையொட்டி வரும் 22ம் தேதி ரஷ்யாவின் கசான் நகருக்கு செல்லும் பிரதமர் மோடி

0

பிரிக்ஸ் மாநாட்டையொட்டி வரும் 22ம் தேதி ரஷ்யாவின் கசான் நகருக்கு செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் புதினை சந்தித்து பேசுகிறார்.

பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்காவை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் 16வது மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் வரும் 22 மற்றும் 23ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், வரும் 22ம் தேதி அங்கு செல்லும் பிரதமர் மோடி, பிரிக்ஸ் மாநாட்டில் உரையாற்றுவதுடன், ரஷ்ய அதிபர் புதினையும் நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

BRICS நாடுகள் உலக மக்கள்தொகையில் 41 சதவீதத்தையும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 24 சதவீதத்தையும் கொண்டுள்ளது. அதேபோல், சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் 16 சதவீத பங்கைப் பகிர்ந்து கொள்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here