பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் துணைவியின் பெயரை சேர்க்க அல்லது அகற்ற ‘இணைப்பு ஜே’ பயன்படுகிறது
பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் வாழ்க்கைத் துணைவரின் பெயரை இணைக்கவோ அகற்றவோ விண்ணப்பதாரர்கள் ‘இணைப்பு ஜே’ எனப்படும் பிரமாணப் பத்திரத்தைச் சமர்ப்பிக்கலாம் என பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அவர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலை, கல்வி, சுற்றுலா போன்ற பல காரணங்களுக்காக ஆண்டுதோறும் பல லட்சம் பேர் பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். பாஸ்போர்ட் பெறும் நடைமுறைகளில் மத்திய அரசு சமீபத்தில் சில புதிய நடைமுறைகளை கொண்டுவந்தது.
இதையடுத்து, பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் புதிய மாற்றத்தை வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது. அதன்படி, வாழ்க்கைத்துணைவரின் பெயரை சேர்க்கவோ நீக்கவோ, திருமணச் சான்றிதழ் வேண்டாமென்று தீர்மானிக்கபட்டு, அதற்குப் பதிலாக ‘இணைப்பு ஜே’ எனப்படும் எளிய பிரமாணப் பத்திரம் பயனாளிகளிடம் கோரப்படலாம்.
இந்த மாற்றம், விண்ணப்பச் செயல்முறையை எளிமைப்படுத்துவதும் நேர்மறையான முடிவுகளை விரைவுபடுத்துவதும் நோக்கமாக கொண்டுள்ளது. ‘இணைப்பு ஜே’ என்பது ஒரு நேர்த்தியான மற்றும் எளிதாக பூர்த்தி செய்யக்கூடிய ஆவணமாகும். இதில், விண்ணப்பதாரர்கள் தங்கள் திருமண நிலையை உறுதிப்படுத்தி, வாழ்க்கைத் துணைவர் பெயரை சேர்க்கவோ அகற்றவோ விரும்புவதை வெளிப்படுத்தலாம்.
தகுதியுள்ளவர்கள் இந்த புதிய நடைமுறையைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள். மேலதிக விபரங்களுக்கு பாஸ்போர்ட் சேவா இணையதளத்தை பார்வையிடலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.