அகமதாபாத் விமான விபத்துச் சம்பவம் தொடர்பாக, பாதிப்புக்குள்ளானவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை நினைத்து மிகுந்த கவலையுடன் இருக்கிறேன். அனைத்து சாத்தியமான வழிகளிலும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக நம்புகிறேன் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்தார்.

மேலும், “ஏர் இந்தியா AI 171 எனும் விமானம் 242 பயணிகளுடன் அகமதாபாத்தில் கடுமையான விபத்துக்கு உள்ளான செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட விமானம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாகவும், விபத்திற்கான காரணம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box