காட்பாடி ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக மெமு ரயில்கள் ரத்து
காட்பாடி ரயில் நிலையத்தில் ஜூன் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், சில மெமு ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
அதன்படி:
- திருப்பதியிலிருந்து நாளை இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் மெமு ரயில்
- காட்பாடியிலிருந்து இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் மெமு ரயில்
- சென்னை கடற்கரைமுனையிலிருந்து இரவு 6 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலை நோக்கி செல்லும் மெமு ரயில்
இவை அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.
மேலும்:
- ஜூன் 26 மற்றும் 28 தேதிகளில் திருவண்ணாமலையிலிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மெமு ரயிலும் ரத்து செய்யப்படும்.
பகுதி ரத்து செய்யப்படும் ரயில்கள்:
- அரக்கோணத்திலிருந்து நாளை இரவு 9 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் மெமு ரயில் – சேவூர் முதல் காட்பாடி வரையிலான பாதையில் மட்டும் ரத்து.
- விழுப்புரத்திலிருந்து இரவு 7.10 மணிக்கு புறப்படும் மெமு ரயில் – வேலூர் முதல் காட்பாடி வரை ரத்து செய்யப்படுகிறது.
Facebook Comments Box