மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சேவை செய்தோருக்கான மாநில விருதுகள் – விண்ணப்பிக்க அழைப்பு

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மாநில விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று தமிழக முதல்வரால் வழங்கப்படுகின்றன.

இதற்காக, தற்போதைய ஆண்டுக்கான விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுகள் கீழ்க்கண்ட பிரிவுகளில் வழங்கப்படும்:

  • சிறந்த மருத்துவர்
  • வேலைவாய்ப்பு வழங்கிய சிறந்த தனியார் நிறுவனம்
  • சிறந்த சமூக பணியாளர்
  • அதிக கடன் வழங்கிய மத்திய/மாவட்ட கூட்டுறவு வங்கி
  • சிறந்த தொண்டு நிறுவனம்

இந்த விருதுகளுடன் 10 கிராம் தங்கப் பதக்கம், சான்றிதழ்கள் மற்றும் (தொண்டு நிறுவனத்திற்காக) ரூ.50,000 ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் விதிமுறைகள்:

  • தகுதி உள்ளவர்கள் http://awards.tn.gov.in இணையதளத்தில் உள்ள படிவத்தில் விவரங்களைப் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
  • ஆன்லைன் விண்ணப்பித்தே ஆக வேண்டும்; கைமுறையாக மட்டும் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.
  • விண்ணப்பத்தின் இரண்டு நகல்களை, ஜூன் 30 மாலை 5 மணிக்குள் வடசென்னை அல்லது தென்சென்னை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த தகவலை சென்னை மாவட்ட ஆட்சியர் திரு. ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.

Facebook Comments Box