ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷின் உடல், 5 நாட்கள் கழித்து சொந்த ஊரில் தகனம்

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ், கடந்த ஜூலை 27ஆம் தேதி நெல்லை KTC நகரில் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக, கவின் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும், அந்தப் பெண்ணின் பெற்றோர்களான காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இருவரும் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், “சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி இருவரும் கைது செய்யப்படாவிட்டால், உடலை எடுத்துச் செல்ல மாட்டோம்” எனக் கூறி, கவினின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, உதவி ஆய்வாளர் சரவணன் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட நிலையில், சிபிசிஐடி போலீஸார் வழக்கை விசாரிக்க உத்தியோகபூர்வமாக சேர்ந்துள்ளனர். அதிகாரிகள் நடத்திய தொடர்ச்சியான பேச்சுவார்த்தையின் மூலம், கவின் செல்வகணேஷின் உறவினர்கள் அவரது உடலை வாங்க சம்மதித்தனர்.

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல், 5 நாட்களுக்கு பிறகு அவரது தந்தை சந்திரசேகர் மற்றும் தம்பி ப்ரவீன் ஆகியோரிடம் நேற்று காலை ஒப்படைக்கப்பட்டது.

பின்னர், அமைச்சர் K.N. நேரு, திருநெல்வேலி ஆட்சியர் ஆர். சுகுமார், எம்எல்ஏக்கள் அப்துல் வகாப், ராஜா உள்ளிட்டோர் கவினின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, அவரது உடல் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சொந்த ஊர் ஆறுமுகமங்கலத்திற்கு கொண்டு வரப்பட்டு:

  • எம்.பி. கனிமொழி
  • அமைச்சர்கள் பெ.கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன்
  • எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ்
  • தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி
  • மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்
  • எஸ்.பி. ஆல்பர்ட் ஜான்
  • நாம் தமிழர் சீமான்
  • அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. சண்முகநாதன், ராஜலெட்சுமி
  • மற்றும் பல்வேறு கட்சிகள், சமூக அமைப்புகளை சேர்ந்தோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், அவரது உடல் ஊர்வலமாக அருகிலுள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, தகனம் செய்யப்பட்டது. இதற்காக போலீஸார் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


சுபாஷினிக்கு சிபிசிஐடி சம்மன்

இதேவேளை, இந்த வழக்கில் முக்கியமான தனியாகக் கருதப்படும் கவின் காதலித்ததாக கூறப்படும் சுபாஷினிக்கு, சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மனும் அனுப்பி உள்ளனர்.

Facebook Comments Box