தீரன் சின்னமலை 220ஆம் ஆண்டு நினைவு தினம்: அதிமுகவினர் மலர்சாற்றி அஞ்சலி செலுத்தினர்

சுதந்திர இயக்க வீரர் தீரன் சின்னமலையின் 220வது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை, ஈரோடு ஓடாநிலை, சேலம் சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அவரின் திருவுருவச் சிலைகள் மற்றும் புகைப்படங்களுக்கு அதிமுகவினர் மலர்சாற்றி அஞ்சலி செலுத்தினர்.

இது தொடர்பாக அதிமுக வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 220வது நினைவு நாளான இன்றைய தினம் காலை 10 மணிக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுப்படி,

சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கும், அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த அவரது புகைப்படத்துக்கும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்னையன் தலைமையில், முன்னாள் மத்திய அமைச்சர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கோகுல இந்திரா, பென்ஜமின், சின்னையா, அப்துல் ரஹீம்,

அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் ஆர். கமலக்கண்ணன், அமைப்புச் செயலாளர் ஆதிராஜா ராம், தொழிற்சங்க பேரவைத் தலைவர் தாடி ம. ராசு, அமைப்புச் செயலாளர்கள் ராயபுரம் மனோ, திருவேற்காடு பா. சீனிவாசன், தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்டச் செயலாளர் விருகை ரவி, வடசென்னை வடமேற்கு மாவட்டச் செயலாளர் புரசை பாபு, கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் விஜயகுமார், புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் ஜெயவர்த்தன் ஆகியோர் மாலை அணிவித்து, மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழகத்தின் துணை நிர்வாகிகள், மேலும் பல்வேறு நிலைகளில் கட்சிக்காக செயற்படும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

ஈரோட்டில் மரியாதை நிகழ்வு:

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலத்தில் உள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கும், அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த அவரது புகைப்படத்திற்கும் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, கருப்பணன், கே.வி. இராமலிங்கம் உள்ளிட்டோர் மாலை சூட்டி, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாநகர், புறநகர் கிழக்கு, புறநகர் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் என பெருமளவிலானோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

சேலம் – சங்ககிரி பகுதியில் மரியாதை:

சேலம் மாவட்டம் சங்ககிரி மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்திருந்த அவரது புகைப்படத்திற்கும், சங்ககிரி-ஈரோடு சாலையில் அமைந்துள்ள நினைவுச் சின்னத்தில் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்திற்கும் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, செம்மலை, சரோஜா, சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் இளங்கோவன், பா.ஜ.க. தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்வில் சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட கட்சியின் பல்வேறு நிலைகளில் செயற்படும் நிர்வாகிகள், தொண்டர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Facebook Comments Box