பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டத்தில் முதல்முறையாக வேலைக்கு செல்லும் நபர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்புத் திட்டமாக “பிரதமரின் வளர்ச்சியடைந்த பாரத வேலைவாய்ப்புத் திட்டம்” (PM-Vishwakarma Employment Generation Scheme) அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, தமிழகம் மற்றும் புதுச்சேரி துணை முதன்மை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தின் ஏற்பாட்டில், சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் நேற்று நடைபெற்றது.

இதையொட்டி செய்தியாளர்களிடம் மத்திய துணை முதன்மை தொழிலாளர் ஆணையர் ஸ்நுதாரா கூறியதாவது:

தொழிற்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 2027 ஜூலை மாதத்துக்குள் 3.5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன. இதற்காக ரூ.99,446 கோடி மதிப்பீட்டில் இந்த வேலைவாய்ப்புத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம்,

  • வேலை வழங்குபவர்களும்,
  • முதன்முறையாக வேலைக்கு செல்வோர்களும்,

ஊக்கத்தொகை பெறுவதற்குரியவர்களாக உள்ளனர்.

இந்த திட்டத்தின் முதல் கட்டம் 2025 ஏப்ரல் 1 முதல் 2027 ஜூலை 31 வரை நடைமுறையில் இருக்கும்.

இதன் படி,

2025 ஏப்ரல் முதல் வருங்கால வைப்பு நிதியில் (EPFO) பதிவு செய்து முதன்முறையாக வேலைக்கு செல்லும் நபர்களுக்கு,

ரூ.15,000 வரை ஊக்கத்தொகை இரண்டு தவணைகளாக வழங்கப்படும்.

மேலும், வேலை வழங்கும் நிறுவனங்களுக்கு ஊழியர்களின் சம்பள அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

அதாவது,

  • ரூ.10,000 வரை சம்பளமுள்ள ஊழியரை நியமித்தால், நிறுவனம் ரூ.1,000 பெறும்.
  • ரூ.20,000 வரை சம்பளமுள்ள நபரை நியமித்தால், ரூ.2,000 வழங்கப்படும்.
  • ரூ.20,000க்கும் மேலாக, ரூ.1 லட்சம் வரை சம்பளமுள்ள நபரை நியமித்தால், ரூ.3,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில்,

  • தமிழக தொழிலாளர் கூடுதல் ஆணையர் லட்சுமிகாந்தன்,
  • ஐசிஎஃப் முதன்மை தலைமைப் பணியாளர் அதிகாரி ஆர். மோகன்ராஜா,
  • மத்திய தொழிலாளர் அமலாக்க அதிகாரி எம். ரமேஷ்,
  • அம்பத்தூர் மண்டல EPFO ஆணையர் மனோஜ் பிரபு,
  • இஎஸ்ஐ துணை இயக்குநர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Facebook Comments Box