பாஜகவின் ‘ஸ்லீப்பர் செல்’ துரை வைகோவா? – மல்லை சத்யா குற்றச்சாட்டு

மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா சென்னை செய்தியாளர்களிடம் பேசியதாவது:

மதிமுகவில் உருவான சிக்கல்களுக்கு நாங்கள் காரணமல்ல. ரஷியாவில் சிக்கியிருந்த மருத்துவ மாணவரை மீட்டெடுக்க வேண்டிய கோரிக்கைக் கடிதத்தில், எதிர்க்கட்சியான பாஜக எம்.பி.க்களிடம் ஏன் கையெழுத்து பெற்றார் என்பதை மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ விளக்க வேண்டும்.

அவர் பாஜகவின் ‘ஸ்லீப்பர் செல்’ போலவே தமிழ்நாட்டில் செயல்படுகிறார் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். மதிமுக, துரை வைகோவின் கட்டுப்பாட்டில் இயங்கவில்லை. கருணாநிதியின் மறைவுக்கு முன்னர் முழு ஆதரவாக இருப்பேன் என முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் உறுதி அளித்திருந்தார் என்றால், பாஜக எம்.பி.க்களிடம் கையெழுத்து பெற்றது தவறாக இருந்ததாக ஏன் கூறவில்லை?

வைகோவுக்கு திமுக கூட்டணியில் தொடர விருப்பம் இருக்கலாம். ஆனால், துரை மத்திய அமைச்சராக வேண்டும் என்பதற்கான ஆர்வத்தால் பாஜகவுக்கு அருகாமை காண்பித்து வருகிறார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டு மக்கள் இதை ஏற்க மாட்டார்கள். அண்ணா பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரத்தில் விழா நடத்தும் ஏற்பாடுகளை நாங்கள் மேற்கொண்டு உள்ளோம். என அவர் தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box