மேட்டூருக்கு நீர்வரத்து 21,135 கனஅடியாக உயர்வு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அணைக்கு முன்தினம் காலை விநாடிக்கு 17,906 கனஅடியாக இருந்த வரத்து, நேற்று காலை 21,135 கனஅடியாக உயர்ந்தது.
அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 16,000 கனஅடி, கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது திறப்பதை விட வரத்து அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. நேற்று அணை நீர்மட்டம் 119.06 அடியாகவும், நீர் சேமிப்பு 91.97 டிஎம்சியாகவும் பதிவாகியுள்ளது.
Facebook Comments Box