திருவனந்தபுரத்தில் இருந்து 5 எம்பிக்கள் உட்பட 150 பயணிகளுடன் டெல்லி சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: சென்னையில் அவசரமாக தரையிறக்கம்
திருவனந்தபுரத்தில் இருந்து 5 எம்பிக்கள் உட்பட 150 பயணிகளுடன் டெல்லிக்கு புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானியின் திறமையால் உயிர் பிழைத்ததாக காங்கிரஸ் எம்பி வேணுகோபால் தெரிவித்தார்.
இரவு 10 மணியளவில் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. விமானத்தை அவசரமாக தரையிறக்க முடிவு செய்த விமானி, திருவனந்தபுரம் மற்றும் டெல்லியில் உள்ள விமான கட்டுப்பாட்டு அறைகளுடன் தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்குமாறு விமானிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதையடுத்து, இரவு 11.20 மணியளவில் விமானம் சென்னையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
இதைக் கண்டு அதிர்ச்சியான எங்கள் விமானி, உடனடியாக தனது விமானத்தை மீண்டும் உயரே பறக்க செய்து அனைவரின் உயிரையும் காப்பாற்றினார். சென்னையில் விமானம் தரையிறங்க அனுமதி வழங்கிவிட்டு, அதே நேரத்தில் மற்றொரு விமானத்துக்கு அதே ஓடுபாதையில் எப்படி அனுமதி வழங்கப்பட்டது. இதுதொடர்பாக, டைரக்டர் ஜெனரல் ஆஃப் சிவில் ஏவியேசன், சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் முழு விசாரணை நடத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் அளித்த ஏர் இந்தியா, “தொழில்நுட்பக் கோளாறு மற்றும் மோசமான வானிலை காரணமாக விமானம் சென்னைக்கு திருப்பி விடப்பட்டது. நீங்கள் சொல்வது போல் சம்பவம் நடக்கவில்லை. விமானம் திருப்பிவிடப்பட்டதால் உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம்” என்று தெரிவித்துள்ளது.