“தேமுதிகவின் செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவெடுத்த பிறகு நாங்கள் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவோம். தேமுதிக சார்பில் 234 தொகுதிகளிலும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளோம். அங்கெல்லாம் ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தி வருகிறோம். இதேபோல பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன.
ஜெயலலிதா, கருணாநிதி என இரு பெரும் தலைவர்கள் இல்லாமல் வரும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே எல்லா கட்சிகளுக்கும் இது புதுத் தேர்தல்தான். எல்லாக் கட்சிகளுக்கும் இது முதல் தேர்தல்தான். எல்லா கட்சிகளுக்கும் மிகப்பெரிய சவால்கள் காத்திருக்கின்றன. எனவே இந்தத் தேர்தல் ஒரு மாற்றத்தைத் தரும் தேர்தல்.
தேமுதிக ஏற்கனவே தனியாக தேர்தல் களம் கண்ட கட்சிதான். கட்சி தொடங்கி 16 ஆண்டுகள் ஆகின்றன. எங்களுக்கு தேர்தல் பிரசாரம் என்பது பெரிய விஷயமே இல்லை. எனவே, செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி அதன் பின்னர்தான் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவோம்” என்று பிரேமலதா கூறினார்.
The post எல்லா கட்சிகளுக்கும் இது புதுத் தேர்தல்….. முதல் தேர்தல்…. இரண்டு பேர் இல்லாத தேர்தல்…. பிரேமலதா பேச்சு appeared first on தமிழ் செய்தி.
Facebook Comments Box