கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நேற்று முன்தினம் போலி மதுபானம் வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் கண் எரிச்சல், வயிற்று வலி ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 37 பேர் ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்த நிலையில் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் உயிரிழந்தவர் மது பாக்கெட்டுகளை உட்கொண்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், நோய்வாய்ப்பட்டவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க உத்தரவிட்டார்.
Facebook Comments Box