முன்னாள் ராணுவ வீரர்களின் குறைகளை அறிய இருசக்கர வாகனப் பேரணி

முன்னாள் வீரர்களின் குறைகளை கேட்டு தீர்வு காணும் நோக்கில் ராணுவத்தினர் இருசக்கர வாகனப் பேரணியை மேற்கொண்டுள்ளனர்.

1776-ஆம் ஆண்டு தொடங்கிய மெட்ராஸ்–2 பிரிவு தனது 250-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கேரளா மற்றும் தமிழகத்தின் 26 மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 2,500 முன்னாள் வீரர்களை சந்தித்து அவர்களது பிரச்சனைகளை அறியும் பணியை ராணுவ வீரர்கள் தொடங்கியுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட மெட்ராஸ்–2 யூனிட்டை சேர்ந்த ராணுவத்தினர், நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தை இருசக்கர வாகனப் பேரணியாக வந்தடைந்தனர். அங்கு மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டர் பிரிகேடியர் கிருஷ்ணேந்து தாஸ் அவர்களை வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரர்கள், போரில் உயிர்நீத்தவர்களின் மனைவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ராணுவத்தினருடன் உரையாடினர். ஆகஸ்ட் 18-ஆம் தேதி தொடங்கிய இந்தப் பேரணி, வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நிறைவடைய உள்ளது.

Facebook Comments Box