மதுரை தவெக மாநாட்டிற்கு இருசக்கர வாகனங்களில் வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

மதுரை மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளதாவது: ஆகஸ்ட் 21 அன்று மதுரை – தூத்துக்குடி சாலையின் பாரபத்தி பகுதியில் நடைபெறும் தவெக கட்சியின் 2-வது மாநில மாநாட்டிற்கு, பொதுமக்கள் மற்றும் கட்சியினர் இருசக்கர வாகனங்களில் வராமல் இருக்க வேண்டும். மாநாட்டினை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சிறப்பு போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பார்க்கிங் – 1-க்கு செல்லும் வழித்தடங்கள்:

  • கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்ட வாகனங்கள் → கோவில்பட்டி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ஆவியூர் வழியாக மாநாட்டு திடல்.
  • தூத்துக்குடி, விருதுநகர் வாகனங்கள் → அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ஆவியூர் வழியாக.
  • ராமநாதபுரம் வாகனங்கள் → பார்த்திபனூர், நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ஆவியூர் வழியாக.
  • தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை வாகனங்கள் → சிவகங்கை, திருப்புவனம், ஏ.முக்குளம், மீனாட்சிபுரம், ஆவியூர் வழியாக.

பார்க்கிங் – 1ஏ வழித்தடங்கள்:

  • கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி வாகனங்கள் → திண்டுக்கல் மார்க்கம், பாண்டியராஜபுரம், நாகமலை புதுக்கோட்டை, கப்பலூர் மேம்பாலம், மேலக்கோட்டை, கூடக்கோவில் வழியாக.
  • தேனி வாகனங்கள் → ஆண்டிபட்டி கணவாய், உசிலம்பட்டி, செக்கானூரணி, நாகமலை புதுக்கோட்டை, கப்பலூர் மேம்பாலம், மேலக்கோட்டை, கூடக்கோவில் வழியாக.

பார்க்கிங் – 2 மற்றும் 3 வழித்தடங்கள்:

  • சென்னை, விழுப்புரம், வேலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை வாகனங்கள் → திருச்சி மார்க்கம், விராலிமலை, மேலூர் விரகனூர் ரவுண்டானா, அருப்புக்கோட்டை சந்திப்பு, பாரபத்தி வழியாக.

கனரக வாகன மாற்றுப்பாதைகள்:

  • வடமாவட்டங்களில் இருந்து தென்மாவட்டங்களுக்கு → திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், திருமங்கலம் வழியாக.
  • தென்மாவட்டங்களில் இருந்து வடமாவட்டங்களுக்கு → திருமங்கலம், திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி வழியாக.
  • வடமாவட்டங்களில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் → திருச்சி, கீரனூர், புதுக்கோட்டை, காரைக்குடி வழியாக.
  • சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து வடமாவட்டங்களுக்கு → காரைக்குடி, கீரனூர், புதுக்கோட்டை, திருச்சி வழியாக.
  • மேற்கு மாவட்டங்கள் ↔ தென்மாவட்டங்கள் → திண்டுக்கல், திருமங்கலம் வழியாக.
  • ராமநாதபுரம், சிவகங்கை ↔ மேற்கு மாவட்டங்கள் → கொட்டாம்பட்டி, நத்தம், திண்டுக்கல் வழியாக.
  • தேனி ↔ தென்மாவட்டங்கள் → உசிலம்பட்டி, பேரையூர் வழியாக.
  • தேனி ↔ ராமநாதபுரம், சிவகங்கை → பெரியகுளம், திண்டுக்கல், நத்தம், கொட்டாம்பட்டி வழியாக.

பொதுமக்கள் மாற்றுப்பாதைகள்:

  • மதுரை வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் → ராமநாதபுரம் ரிங்ரோடு, திருப்புவனம், நரிக்குடி, திருச்சுழி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை வழியாக செல்ல வேண்டும்.
  • மேலும், கப்பலூர் பாலம், திருமங்கலம், கள்ளிக்குடி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை வழியாகவும் செல்லலாம்.

காவல்துறை வேண்டுகோள்:

மாநாட்டுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் கட்சியினர், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சிரமங்களைத் தவிர்க்க, குறிப்பாக இருசக்கர வாகனங்களில் வருவதை தவிர்க்க வேண்டும். மேலும், மாநாட்டு வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ள மாற்றுப்பாதைகளையே பயன்படுத்துமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

Facebook Comments Box