“காக்கா வலிப்பு என்ற சொல்லுக்கு நாகரிகமான மாற்றுச் சொல் தேவை” – முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி

சென்னையில் நடைபெற்ற இகான்–2025 தேசிய கருத்தரங்கில் கலந்து கொண்ட மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி, “காக்கா வலிப்பு” என்ற சொல் அவமானகரமானது என்பதால், அதற்குப் பதிலாக நாகரிகமான மாற்றுச் சொல் உருவாக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இந்த கருத்தரங்கு இந்திய கால்–கை வலிப்பு சங்கம் (எபிலிப்சி சொசைட்டி) சார்பில் நடத்தப்பட்டது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியை கோபாலகிருஷ்ண காந்தி தொடங்கி வைத்து விழா மலரையும் வெளியிட்டார். இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து முன்னணி நரம்பியல் நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் சமீபத்திய வலிப்பு நோய் கண்டறிதல், சிகிச்சை மற்றும் மேலாண்மை தொடர்பான முன்னேற்றங்கள் பகிரப்பட்டன.

அங்கு உரையாற்றிய கோபாலகிருஷ்ண காந்தி கூறியதாவது:

  • வலிப்பு நோய் கடுமையானதாக இருந்தாலும், குணப்படுத்தக்கூடிய ஒன்றே.
  • ஆனால் சமூகத்தில் பயன்படும் சொற்களே நோயாளிகளை மனஅழுத்தத்திற்கு உள்ளாக்குகின்றன.
  • “தொழு நோயாளி” என்ற சொல் போல், “காக்கா வலிப்பு” என்ற சொலும் அவமானகரமானது.
  • இதுபோன்ற சொற்களை மாற்றி, நாகரிகமான சொற்களை உருவாக்குவது அவசியம்.

அவர் மேலும், “மனநலம் சில நேரங்களில் பணிவானதாகவும், சில நேரங்களில் வலிப்புத்தாக்கம் போல திடீரென மாறக்கூடியதாகவும் இருக்கும். ஆனால் அதனை புரிந்துகொள்வதில் நம் சமூகமே இன்னும் பின்தங்கியுள்ளது” என குறிப்பிட்டார்.

Facebook Comments Box