அமெரிக்க வரி விதிப்பு காரணமாக திருப்பூர் ஜவுளி மையத்தில் ரூ.3,000 கோடி ஏற்றுமதி பாதிப்பு – முதல்வர் ஸ்டாலின்

இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி காரணமாக தமிழக ஏற்றுமதி துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தனது சமூக வலைதளப் பதிவில் அவர் கூறியதாவது:

“இந்திய பொருட்களின் மீது அமெரிக்கா 50% இறக்குமதி வரி விதித்துள்ளது. இதன் தாக்கம் தமிழக ஏற்றுமதியில் தீவிரமாக உணரப்படுகிறது. குறிப்பாக, ஜவுளித் தொழிலின் மையமாக விளங்கும் திருப்பூரில் மட்டும் ரூ.3,000 கோடி மதிப்பிலான ஏற்றுமதி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கானோரின் வேலைவாய்ப்பு அபாயத்தில் உள்ளது. எனவே நமது தொழில்துறையை காக்க உடனடி நிவாரண நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்கா கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி முதல், இந்திய பொருட்களுக்கு முன்பே இருந்த 25% இறக்குமதி வரிக்கு மேலாக கூடுதல் 25% வரி விதித்துள்ளது. இதனால் மொத்த வரி 50% ஆக உயர்ந்து, இந்தியாவின் ஏற்றுமதியில் பெரிய வீழ்ச்சி ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. தொழிலாளர் சார்ந்த துறைகளில் ஏற்றுமதி 70% வரை குறையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box