சென்னையில் செப்.2, 3 தேதிகளில் ட்ரோன் பறக்க தடை – குடியரசுத் தலைவர் வருகை காரணம்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அரசு முறை பயணமாக சென்னைக்கு வருவதையடுத்து, செப்டம்பர் 2 மற்றும் 3 தேதிகளில் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் 2-ம் தேதி மதியம் நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர், கிண்டியில் உள்ள ராஜ் பவனில் இரவு தங்குகிறார். அடுத்த நாள் (3-ம் தேதி) சென்னையிலிருந்து திருச்சி நோக்கி விமானம் மூலம் புறப்படுகிறார்.
இதனை முன்னிட்டு, சென்னை விமான நிலையம், வர்த்தக மையம், ராஜ் பவன் மற்றும் குடியரசுத் தலைவர் வாகனம் செல்லும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அந்தப் பகுதிகளில் ட்ரோன் கேமரா அல்லது பிற பறக்கும் சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு காவல் ஆணையர் அருண் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.