2026 தேர்தல் வியூகம் குறித்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டை தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
இது தொடர்பாக அதிமுக வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், 2026 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து எடப்பாடி பழனிசாமி விரிவான ஆலோசனைகளை வழங்கினார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2026 தேர்தலை முன்னிட்டு, “மக்களை காப்போம் – தமிழகம் மீட்போம்” என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலைமையில், அடுத்த கட்ட தேர்தல் வியூகங்கள் குறித்த ஆலோசனைகளும் இன்று நடைபெற்றதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.