ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா சார்பில் அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கஜகஸ்தானில் ஜூலை 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர், பிரதமர் மோடிக்கு பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியா சார்பில் ஆஜராவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில், பயங்கரவாதத்தை ஒழிப்பது மற்றும் நாட்டின் இறையாண்மையை மதிப்பது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

Facebook Comments Box