விஜயகாந்தின் சகோதரி விஜயலட்சுமி மரணம் – பிரேமலதா, சுதீஷ் உள்ளிட்டோர் அஞ்சலி

தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் சகோதரியும், மருத்துவருமான டாக்டர் விஜயலட்சுமி (78) உடல் நலக்குறைவால் மறைந்தார். மதுரையில் தனியார் மருத்துவமனை நடத்தி வந்த இவர், வயது மூப்பு காரணமாக சென்னையில் மகனுடன் வசித்து வந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு காலமானார்.

அவரது கணவர் துரைராஜ், நரம்பு சுருள் நோய் தடுப்பு நிபுணராக பணியாற்றி வருகிறார். சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்ட விஜயலட்சுமியின் உடல், மதுரை அண்ணா நகரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, பொருளாளர் சுதீஷ், இளைஞரணிச் செயலாளர் விஜயபிரபாகரன், தம்பி சண்முக பாண்டியன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல், மதுரையைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். பின்னர், நேற்று மாலை கீரைத்துறை மின்மயானத்தில் இறுதி சடங்கு நடைபெற்று, விஜயலட்சுமியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Facebook Comments Box