பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் நியமனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் நியமனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஆகஸ்ட் 31-ஆம் தேதி மாநில டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, வெங்கட்ராமனை பொறுப்பு டிஜிபியாக அரசு நியமித்தது. இந்த நியமனத்தை சவாலிட்டு வழக்கறிஞர் வரதராஜ் மனு தாக்கல் செய்தார்.
உச்சநீதிமன்றம் தற்காலிக அடிப்படையில் டிஜிபி நியமனம் செய்யக்கூடாது என முன்பு தீர்ப்பு வழங்கியிருப்பதாகவும், அதனை மீறி வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டது சட்டவிரோதம் எனவும் மனுவில் வாதிடப்பட்டது.
தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அமர்ந்து வழக்கை விசாரித்தனர். விசாரணையின் போது, டிஜிபி நியமனம் தொடர்பாக ஏற்கெனவே உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கியிருப்பதால், இங்கு மேலும் எந்த உத்தரவும் வழங்க இயலாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.