சாதிய படுகொலைகளை தடுக்கும் தனி சட்டம் அவசியம் – பிருந்தா காரத்

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (27), கடந்த ஜூலை 27-ம் தேதி நெல்லையில் சாதி மாறி காதலித்த காரணத்தால் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான பிருந்தா காரத், மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்துடன் சென்று கவின் செல்வகணேஷின் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பிருந்தா காரத் கூறியதாவது:

  • கவின் செல்வகணேஷ் கொலை நாட்டுக்கே அவமானம்.
  • அவரது குடும்பத்துக்கு தமிழக அரசு உரிய உதவிகளை வழங்க வேண்டும்.
  • இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்க வேண்டும்.
  • வழக்கில் சாதி அடிப்படையிலான கும்பலின் தொடர்பும் உள்ளதால் அவர்களையும் கைது செய்ய வேண்டும்.

சாதி அடிப்படையிலான கொலைகளை தடுப்பதற்கான தனிப்பட்ட சட்டம் தேவை. இத்தகைய படுகொலைகள் அதிகமாக நடைபெறும் வட மாநிலங்களில் கூட இதற்காக சட்டம் கொண்டு வர வேண்டுமென தேசிய மகளிர் ஆணையம், பல ஜனநாயக அமைப்புகள் மற்றும் உச்ச நீதிமன்றம் 2014 முதல் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் மத்திய பாஜக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, முன்னுதாரணமாக தமிழக அரசு உடனடியாக இந்த சட்டத்தை இயற்ற வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்” என்றார்.

தேர்தல் ஆணையம் குறித்தும் கருத்து:

“இந்திய அரசியலை ஆளும் சக்திகள் பன்முகத்தன்மைக்கும் ஒற்றுமைக்கும் எதிராக செயல்படுகின்றன. தமிழகத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ் கால்பதிக்க முயற்சி செய்கின்றன. அரசியலமைப்பு, மதச்சார்பின்மை, ஜனநாயக மரபுகளை அச்சுறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளை தோற்கடிப்பதே எங்கள் நோக்கம். அதற்காக மக்களோடு இணைந்து போராடுகிறோம். இண்டியா கூட்டணி வலிமையாக உள்ளது. ஆனால், தேர்தல் ஆணையம் வாக்குகளைப் பாதுகாக்காமல் வாக்காளர்களை நீக்கும் அமைப்பாக மாறியுள்ளது. இதை எதிர்த்து இண்டியா கூட்டணி தொடர்ந்து போராடும்” என பிருந்தா காரத் தெரிவித்தார்.

Facebook Comments Box