மாநிலங்களுக்கு முழு நிதி சுயாட்சி அவசியம் – பேரவை தலைவர் அப்பாவு வலியுறுத்தல்
பெங்களூருவில் நடைபெற்ற 11வது காமன்வெல்த் நாடாளுமன்ற சங்க மாநாட்டில், தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு உரையாற்றினார்.
அவர் கூறியதாவது:
- மாநிலங்கள் சிறப்பாக செயல்பட அமைதி, வளம், வளர்ச்சி முக்கியம்.
- கடந்த கால குழுக்கள் (ராஜமன்னார், சர்க்காரியா, புஞ்சி) மத்திய-மாநில உறவுகளுக்கான பரிந்துரைகளை வழங்கியிருந்தாலும், நடைமுறையில் பின்பற்றப்படவில்லை.
- ஆளுநர் நியமனத்தில் முதல்வரின் ஆலோசனை புறக்கணிக்கப்படுகிறது.
- கனிமம், மீன்வளம், கூட்டுறவு போன்ற அதிகாரங்கள் மாநிலங்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன.
- மத்திய அரசு மாநிலங்களின் கருத்தின்றி வரி விதிக்கிறது; கல்வி, வேலை வாய்ப்பு திட்ட நிதிகள் தாமதமோ, குறைப்போ சந்திக்கின்றன.
- ஜெர்மனியில் போல் மத்திய-மாநில அதிகார பகிர்வு சமமாக இருக்க வேண்டும்.
எனவே, மாநிலங்களுக்கு முழு நிதி சுயாட்சி வழங்கப்பட வேண்டும் அல்லது மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி பங்கு 75% ஆக உயர்த்தப்பட வேண்டும் என்று அப்பாவு வலியுறுத்தினார்
Facebook Comments Box