ஆவடி பேருந்து நிலையம் தற்காலிகமாக மாற்றம்

ஆவடி பேருந்து நிலையத்தை நவீனப்படுத்தி புதிய வசதிகளுடன் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளதால், இங்கிருந்த பழைய பேருந்து நிலையம் இன்று (செப்.14) முதல் 100 மீட்டர் தொலைவில் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது.

சென்னை மாநகர் போக்குவரத்து கழக இணை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) திட்டத்தின் கீழ், ஆவடி பேருந்து நிலையத்தை முழுமையாக மேம்படுத்தி புதிய முனையமாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால், தற்போதைய பேருந்து நிலையம் செப்.14 முதல் எம்.டி.எச் சாலையில் 100 மீட்டர் தூரத்தில் உள்ள காலியிடத்திற்கு தற்காலிகமாக மாற்றப்படுகிறது.

இதனால், பழைய நிலையத்தில் இருந்து புறப்பட்ட அனைத்து பேருந்துகளும் இனி இந்த தற்காலிக முனையத்திலிருந்து இயக்கப்படும். அதேபோல், மாதாந்திர பாஸ் விற்பனை மையமும் அங்குதான் செயல்படும்.

கட்டுமானப் பணிகள் நிறைவு பெறும் வரை, பேருந்துகள் தற்காலிக முனையத்திலிருந்து புறப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box