விஜய் தலைமையில் கூட்டணி உறுதி – தினகரன்

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்ததாவது:

“தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நிச்சயம் ஒரு கூட்டணி அமையும். அதில் அமமுக இணைவது குறித்து இப்போது கூற முடியாது.

பாஜக கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக பழனிசாமி இருந்தால், அதில் நாம் சேர்வது சாத்தியமல்ல. பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கக் கூடாது என்பதே எங்களது தெளிவான கோரிக்கை.

விஜய் பிரச்சாரத்தைப் பார்க்கும்போது, அதிகமான இளைஞர்கள், இளம் பெண்கள், 40 வயதுக்குள் உள்ளவர்கள் கலந்து கொண்டிருப்பதை கவனித்தேன். அவர் ஜெயலலிதா பாணியில் பேசவில்லை, ஆனால் பெரும்பான்மையான மக்கள் ஆர்வத்துடன் வருவது குறிப்பிடத்தக்கது.

பெரம்பலூருக்கு விஜய் சென்றபோது நேரம் நள்ளிரவாகிவிட்டதால் அங்கு பிரச்சாரம் நடத்தப்படவில்லை. இருப்பினும், அவர் தலைமையில் ஒரு கூட்டணி உருவாகும் என்பது உறுதி.

அதேபோல், சீமான் தலைமையிலும் ஒரு கூட்டணி உருவாகும். எனவே, தமிழகத்தில் நான்கு முனை போட்டி தவிர்க்க முடியாத ஒன்று,” என்று தினகரன் வலியுறுத்தினார்.

Facebook Comments Box