“பள்ளி மாணவர்களை வரவழைத்து கூட்டம் காட்டிய விஜய்” – அமைச்சர் எஸ். ரகுபதி விமர்சனம்

தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி, பள்ளி மாணவர்களை வரவழைத்து பிரச்சார கூட்டத்தை காட்டிய பரிதாப நிலை நடிகர் விஜய்க்கு ஏற்பட்டுள்ளதாக விமர்சனம் செய்தார்.

புதுக்கோட்டை மாலையீடு பகுதியில் நடைபெற்ற திமுக தெற்கு மாவட்டச் செயற்குழு கூட்டத்தில், அமைச்சர்கள் எஸ். ரகுபதி, சிவ. வீ. மெய்யநாதன், வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே. செல்லபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “தமிழகம் முழுவதும் மக்கள் கூட்டத்தை வரவழைத்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி, மக்களுக்கு தொந்தரவு அளித்துள்ளார் தவெக தலைவர் விஜய். தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என கூறுவது தவறு. திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு இல்லை; ஆதரவு அலைதான் உள்ளது. திமுக அசைக்க முடியாத சக்தியாக இருப்பதால் எதிர்க்கட்சிகள் பொய் குற்றச்சாட்டுகளைப் போட்டுக்கொண்டுள்ளனர். பாஜகவுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ உறவு இருக்க தேவையில்லை. பள்ளி மாணவர்களை அழைத்து கூட்டத்தை காட்டும் பரிதாப நிலை விஜய்க்கு ஏற்பட்டுள்ளது. சட்டம் தேவையான நடவடிக்கையை எடுக்கத் தடை செய்யாது” என்று தெரிவித்தார்.

அவர் மேலும் 2011-ல் திமுகவை ஆதரித்து நடிகர் வடிவேல் பிரச்சாரம் செய்த போதே விளம்பரம் இல்லாமல் கூட்டம் நடைபெற்றதாலும், வாக்குகளாக மாறவில்லை; அதுபோலவே தற்போது விஜய்க்கும் கூட்டம் ஒரு வாக்கு ஆதாரமாக மாறாது எனக் கூறினார்.

Facebook Comments Box