தேர்தலில் மாற்றுத் திறனாளிகள் எளிதாக வாக்களிக்க பிரத்யேக வசதி: சட்டரீதியாக உறுதி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க தேவையான பிரத்யேக வசதிகளை சட்டரீதியாக உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாற்றுத் திறனாளி வைஷ்ணவி ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவில், 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது மாற்றுத் திறனாளிகள் வாக்குச்சாவடிகளை எளிதில் அணுகும் வகையில் வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதனை சட்டரீதியாக உறுதி செய்யவும், தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம். வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்ட விதிகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே வாக்குச்சாவடிகள் எளிதில் அணுகக்கூடியதாகவும், பார்வையற்றோர் வாக்களிக்க தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் என வாதிடப்பட்டது.

இதனை பரிசீலித்த நீதிபதிகள், தேர்தலில் வாக்களிக்க மாற்றுத் திறனாளிகளுக்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும், அதற்கான விதிகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து விரிவான பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

மேலும், இதற்கான விசாரணையை நீதிமன்றம் 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

Facebook Comments Box