2026-ல் கரூரிலிருந்து திமுக வெற்றிப் பயணம் தொடங்கும்: செந்தில் பாலாஜி நம்பிக்கை

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் வெற்றிப் பயணத்தை கரூரிலிருந்தே தொடங்குவோம் என முன்னாள் அமைச்சர், எம்எல்ஏ செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

கரூர் கோடங்கிபட்டியில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் அவர் வரவேற்புரை ஆற்றியபோது, “2026 தேர்தல் வெற்றிக்கு முதல்வரின் வருகை நல்ல தொடக்கமாக அமையும். அந்த வெற்றிக் கணக்கை கரூரிலிருந்து தொடங்குவோம். அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவது நிச்சயம் நாம்தான்” என்றார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றும்போது, “இந்த முப்பெரும் விழா திமுக வரலாற்றில் முக்கிய இடம் பெறும். தலைவர் முதன் முதலாக போட்டியிட்டு வெற்றி பெற்றது கரூர் மாவட்டம். இங்கு உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளையும் அடுத்த தேர்தலில் திமுக கைப்பற்றும்” என்று வலியுறுத்தினார்.

எம்.பி. கனிமொழி பேசுகையில், “கரூரில் நடந்த இந்த மாபெரும் முப்பெரும் விழா, இந்தியாவின் பார்வையை இங்கு திருப்பியுள்ளது. நமது பாரம்பரிய எதிரிகளை எல்லாம் வென்றே தீருவோம்” என்று கூறினார்.

மேலும், முதல்வர் மேடைக்கு வந்த சில நிமிடங்களிலேயே மழை பெய்யத் தொடங்கியது. ஆனால், தொண்டர்கள் மழையில் நனைந்தபடியே நாற்காலிகளை குடையாகப் பயன்படுத்தி உற்சாகத்துடன் நிகழ்ச்சியைத் தொடர்ந்து கண்டுகளித்தனர்.

Facebook Comments Box