சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட இந்த மிரட்டலைத் தொடர்ந்து, மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு அகற்றும் நிபுணர்களை கொண்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

நீதிபதிகள் அறைகள் மற்றும் நீதிமன்ற அறைகளில் முழுமையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதுகாப்புப் பணியாளர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

இதற்கு முன்பு, கடந்த மாதம் சென்னை உயர் நீதிமன்றத்துக்கும், கடந்த வாரம் சென்னை மாவட்ட நீதிமன்றத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தது. தற்போது மீண்டும் உயர் நீதிமன்ற வளாகத்திற்கு மிரட்டல் விடப்பட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், மும்பை உயர் நீதிமன்றத்துக்கும் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது. அங்கு சோதனைகள் நடக்கின்றன. கடந்த 12-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதை நினைவில் கொள்ளலாம்.

நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் பிற பொதுச் சூழல்களுக்கு மிரட்டல்கள் வரும் சூழலில், தற்போது நீதிமன்றங்களுக்கும் மிரட்டல்கள் தொடர்கதையாகப் பதிவாகி வருகிறது.

Facebook Comments Box