தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் – ஒரு நபர் ஆணைய விசாரணை தொடங்க உயர் நீதிமன்றம் உத்தரவு
தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவில், விசாரணைக்காக ஓய்வு பெற்ற நீதிபதி வி.பார்த்திபனை ஒரு நபர் ஆணையமாக நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
காவல்துறை தரப்பில், இந்த உத்தரவை ரத்து செய்ய கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, அரசு ஏன் ஆணைய விசாரணையைப் பற்றி அச்சப்பட வேண்டும் எனக் கேள்வி எழுப்பி, புதிய நபரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது.
இதன்படி, நீதிபதி வி.பார்த்திபன் தனது விசாரணையை தொடங்கலாம் என உறுதி செய்யப்பட்டது. வழக்கு அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு, காவல்துறை தங்களிடம் உள்ள ஆதாரங்களை ஒருநபர் ஆணையத்திடம் சமர்ப்பிக்கலாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.