54 பிறமொழிச் சொற்களுக்கு தமிழ் வார்த்தைகள் அறிவிப்பு

புதிதாக புழக்கத்தில் உள்ள 54 பிறமொழிச் சொற்களுக்கான தமிழ் வார்த்தைகளை தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதிதாக புழக்கத்துக்கு வரும் ஆங்கிலம் மற்றும் பிறமொழி சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை உருவாக்கி பொதுமக்களுக்கு வழங்க சொல் புதிது எனும் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் 5-வது கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதற்கு தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் ம. ராசேந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பேராசிரியர்கள் வ. ஜெயதேவன், சா. சரவணன், பாரதிபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் 54 பிறமொழிச் சொற்களுக்கான தமிழ் வார்த்தைகள் முடிவு செய்யப்பட்டன.

அதன்படி சில வார்த்தைகள்:

  • சிசிடிவி கேமரா – கண்காணி
  • பேட்ஜ் – அடையாள வில்லை
  • டிஎஸ்எல்ஆர் கேமிரா – எதிரொளிப் படக்கருவி
  • சாம்பியன் – வாகையர்
  • டிரண்டி – புதுப்போக்கு
  • டிரண்ட்செட்டர் – புதுப்போக்கு ஆக்குநர்
  • சிப் – சில்லு
  • கிரீஸ் – மசகு
  • பர்ஸ்ட் லுக் – முதல் நோக்கு
  • க்யூஆர் கோடு – விரைவு வினைக்குறி
  • ஆம்லேட் – முட்டை அடை
  • ஆப்பாயில் – முட்டை அப்பம்
  • பிரைடு ரைஸ் – பொரி சோறு
  • ரஸ்க் – உலர்ரொட்டி
  • கேப்சா – ஆளறி குறி

மொத்தம் 54 பிறமொழி சொற்களுக்கான தமிழ் வார்த்தைகள் இதுபோலவே வெளியிடப்பட்டுள்ளன.

Facebook Comments Box