இந்தியன் வங்கியில் உள்ளூர் அலுவலர் நியமனங்களில் தாமதம் ஏன்? – சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி

சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியன் வங்கியில் ‘உள்ளூர் வங்கி அலுவலர்’ நியமனம் குறித்த அறிவிப்பு வெளியிட்டு ஓராண்டாகியும், இன்னும் நியமனம் இறுதி செய்யப்படாதது ஏன்? அதில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா, கட் ஆப் மதிப்பெண்களை பிரிவு வாரியாக ஏன் வெளியிடவில்லை என்ற எனது கேள்விக்கு இந்தியன் வங்கி தலைமைப் பொது மேலாளர் மாயா அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: மாநில மொழிகள் அறிந்த பட்டதாரிகளுக்கான பணி நியமனங்களில் இந்தியன் வங்கி தனித்துவம் பெற்றிருக்கிறது.

இட ஒதுக்கீட்டு அமலாக்கத்தைக் கண்காணிக்க கட் ஆப் மதிப்பெண்களை மற்ற வங்கிகளும் வெளியிடுவதில்லை. 300 நியமனங்களுக்கு ஆன்லைன் தேர்வை வெற்றி கரமாக முடித்துள்ள 1,305 பேருக்கு இறுதிக் கட்டத் தேர்வு முடித்து பணி நியமனம் செய்யப்படுவர் என அவர் பதிலளித்திருந்தார்.

இந்த நியமனத்தில் வங்கி தாமதம் செய்தால், இறுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளோர் வேறு வேலைகளுக்குப் போகும் வாய்ப்புள்ளது. எனவே, உரிய காலத்தில் நியமனங்களை முடிப்பதும், இட ஒதுக்கீடு அமலாக்கம் பற்றிய வெளிப்படைத்தன்மை கொண்டிருப்பதும் அவசியம் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments Box