உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் உள்ள புல்ராய் என்ற கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் பிரசங்கம் செய்தார்.

80,000 பேர் கூடுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டரை லட்சத்துக்கும் அதிகமானோர் திரண்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

பலி எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது.விபத்து தொடர்பாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஆன்மிக சொற்பொழிவு செய்துவிட்டு பாபா தலைமறைவாகியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதேபோல் நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Facebook Comments Box