உடுமலை கறிக்கோழி நிறுவனத்தில் 3-வது நாளாக வருமானவரி சோதனை
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமைந்துள்ள தனியார் கறிக்கோழி நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3-வது நாளாக நேற்றும் சோதனை நடத்தினர். இந்த நிறுவனத்திற்கு பல மாநிலங்களில் கிளை அலுவலகங்கள் உள்ளன.
கடந்த 23-ம் தேதி, உடுமலையில் உள்ள அலுவலகம், தீவன உற்பத்தி ஆலை மற்றும் கணபதிபாளையத்தில் உள்ள இல்லத்தில் 20-க்கும் மேற்பட்ட வருமான வரி அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆய்வைத் தொடங்கினர். இதன்பின், 3-வது நாளாக நேற்றும் சோதனை நடைபெறியது.
இரண்டாம் நாளான நேற்று முன்தினம் சோதனை நடக்கும் போது இரவு 9 மணியளவில் பெண் ஊழியர்கள் மற்றும் சிலர் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால், பெண் ஊழியர்களின் குடும்பத்தினர் கைக்குழந்தைகளுடன் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் பெண் ஊழியர்கள் மட்டும் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று அதிகாலை 5 மணி வரை சோதனை நீடித்தது. இன்று (3-வது நாள்) காலை 10 மணியளவில் தொடங்கிய சோதனை இரவு வரை நீடித்தது. வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கும்படி, சோதனை செப். 27-ம் தேதி வரை நடைபெறும்.