விஜய்யின் நாமக்கல், கரூர் பிரசாரம்: நேரம், இடம் அறிவிப்பு

தவெக தலைவர் விஜய் நாளை (செப்டம்பர் 27) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்த உள்ள நிலையில், அவை எந்த இடங்களில், எந்த நேரத்தில் நடைபெறும் என்ற தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தவெக வெளியிட்டுள்ள அறிக்கையில், “விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நாளை (27.09.2025) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் நடைபெறும். நாமக்கல்லில் கே.எஸ். திரையரங்கம் அருகில் காலை 8.45 மணிக்கும், கரூரில் வேலுச்சாமிபுரம் பகுதியில் மதியம் 12.00 மணிக்கும் நடைபெறும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நாளைய நிகழ்வுகளுக்கான ஏற்பாட்டாளர் குழுவின் விவரங்களும் அதில் உள்ளன.

தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி திருச்சியில் தனது முதல் பிரசாரத்தைத் தொடங்கினார். அன்று திருச்சி, அரியலூர், பெரம்பலூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திருச்சியில் பெரும் கூட்டம் திரண்டதால், அரியலூர் பிரசாரத்திற்கு பின் பெரம்பலூரில் மக்களை சந்திக்க முடியவில்லை.

அதன்பின் செப்டம்பர் 20-ஆம் தேதி நாகப்பட்டினம், திருவாரூரில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிலையில் விஜய், தமிழக பயணத்தைத் தொடங்கி இதுவரை 4 மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடித்துள்ளார். அவருக்கான பொதுமக்கள் ஆதரவு குறையாமல் இருப்பது கவனிக்கப்படுகின்றது. அதே நேரத்தில் அவரது உரைகளை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றன.

இதனால் தவெக தொண்டர்கள் கரூர், நாமக்கல் பகுதிகளில் விஜய்யின் உரையை ஆவலுடன் எதிர்பார்த்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box