தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? – விரைவில் அறிவிப்பு

தமிழக காவல் துறையில் புதிய டிஜிபி விரைவில் அறிவிக்கப்பட உள்ளார். கடந்த மாதம் 31-ஆம் தேதியுடன் சட்டம்-ஒழுங்கு டிஜிபி பதவியிலிருந்த சங்கர் ஜிவால் ஓய்வுபெற்றார்.

இதன்பின், புதிய டிஜிபி நியமிக்கப்படாத வரை, நிர்வாகப் பிரிவு டிஜிபி வெங்கடராமன், கூடுதலாக சட்டம்-ஒழுங்கு டிஜிபி பதவியையும் வகித்துள்ளார்.

இந்த நிலையில், புதிய டிஜிபியை தேர்ந்தெடுக்க ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) அதிகாரிகள், தமிழக தலைமைச் செயலர் நா. முருகானந்தம், உள்துறை செயலர் தீரஜ்குமார் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். கூட்டத்தில் சீமா அகர்வால், சந்தீப் ராய் ரத்தோர் உட்பட 8 பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது.

முடிவில் முதல் 3 இடங்களில் சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப்ராய் ரத்தோர் ஆகியோர் இறுதி பட்டியலில் உள்ளனர். இவர்களில் ஒருவர் விரைவில் புதிய டிஜிபியாக நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Facebook Comments Box