ககன்யான் விண்கலம் டிசம்பர் மாதத்திற்குள் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார்.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் விண்கலத்தை சோதனை செய்யும் பணியில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக பிரசாந்த் பாலகிருஷ்ணன், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன், சுக்லா ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பல்வேறு தடைகள் காரணமாக ககன்யான் விண்கலம் விண்ணில் ஏவப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் உறுதியளித்துள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
ககன்யான் விண்கலத்தை விண்ணில் செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், டிசம்பருக்குள் திட்டம் நிறைவடையும் என்றும் அவர் தெரிவித்தார்.
Facebook Comments Box