பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் அரசியல் விவகாரங்களில் முக்கிய முடிவுகளை எடுக்க மத்திய அரசு அமைச்சரவைக் குழுவை அமைத்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட விஷயங்களில் முக்கிய முடிவுகளை எடுக்க பொதுவாக அமைச்சரவைக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. இந்நிலையில், 8 அமைச்சரவை குழுக்களை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மூன்று ராணுவ தளபதிகள் மற்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் உள்ளிட்ட முக்கிய நியமனங்கள் குறித்த முடிவெடுக்கும் குழுவில் உள்ளனர்.
பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவில் பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் பலர் இடம்பெற்றுள்ளனர்.
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா மற்றும் பலர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்தக் குழுவில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய இணை அமைச்சர் முருகன் மற்றும் பலர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர்.
ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்களும் அமைச்சரவைக் குழுக்களில் இடம்பெற்றுள்ளனர்.
Discussion about this post