கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 31 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் அவரை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி 31 பேர் பலியாகியுள்ளனர்.
நெரிசலில் சிக்கி 22 பேர் மயக்கமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், நெரிசலில் சிக்கி 6 குழந்தைகள், 16 பெண்கள், 9 ஆண்கள் என மொத்தம் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் கரூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தையடுத்து கரூருக்கு அமைச்சர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் விரைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.