கதறும் கரூர்! உயரும் உயிரிழப்புகள்! சமூகவலைதளத்தில் ட்வீட் கூட போடாமல் விஜய் தலைமறைவு!

கரூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட இடத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 29 பேர் உயிரிழந்த நிலையில், விஜய் எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் அந்த மாவட்ட அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகத்தினரை முடுக்கிவிடும் நிலையில், விஜய்யோ சமூகவலைதளங்களில் தனக்காக இறந்தவர்களுக்காக ஒரு ட்வீட் கூட போடாமல் தலைமறைவாக இருந்து வருகிறார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலை கருத்தில் கொண்டு, விஜய் கடந்த 13 ஆம் தேதி முதல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அவர் அன்றைய தினம் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் மக்களை சந்தித்தார்.

அது போல், கடந்த 20 ஆம் தேதி நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தார். இந்நிலையில், இன்றைய தினம் நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி கொடுக்கப்பட்டது. இன்று காலை 8.45 மணிக்கு நாமக்கல் கே.எஸ். திரையரங்கம் அருகே பேச அனுமதி கொடுக்கப்பட்டது.

ஆனால் 8.45 மணிக்குத்தான் அவர் சென்னை வீட்டிலிருந்தே புறப்பட்டுள்ளார். இதில் காலை 9.30 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்த அவர், மேய்க்கல்நாயக்கன்பட்டியில் காரில் இருந்து பேருந்து மூலம் நாமக்கல் சென்றார். கிட்டத்தட்ட குறைந்த தூரத்தை கடக்க பல மணி நேரம் ஆகி, மதியம் 2.45 மணிக்குத்தான் நாமக்கல் சென்றார்.

அதுவரை காலை முதலே தொண்டர்களும் ரசிகர்களும் விஜய்யை பார்க்க கூடியிருந்த நிலையில், விஜய் தாமதமாக வந்ததால் பலர் சாப்பிடாமல் காத்திருந்தனர். இதனால் பெண்கள் உள்பட பலர் மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அங்கிருந்து அவர் 3.45 மணி頃 கரூர் புறப்பட்டு சென்றார். அங்கும் வழிநெடுகிலும் இருந்த கூட்டத்தை கடந்து செல்லவே அவருக்கு மாலை 6.30 மணி ஆகிவிட்டது. 100 அடி சாலையில் விஜய்யை பார்க்க ஏராளமானோர் காத்திருந்த நிலையில், அவரது 60 அடி கொண்ட பஸ் அந்த கூட்டத்தில் புகுந்த போது கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர்.

இதில் மூச்சுத்திணறி 29 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மோசமான நிலையில் உள்ளவர்கள் கரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கரூரில் எங்கு பார்த்தாலும் அலறல் சப்தங்களும் ஆம்புலன்ஸ்களின் ஹாரன்களும் கேட்கப்படுகின்றன. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ்வலை தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: “கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.”

Facebook Comments Box