கட்டுப்பாடு போடுறாங்க.. திமிராக பேசிய விஜய்! 10 நாள் கூட ஆகலை.. தவெக ஆடிய ஆட்டம்? கலங்கிய கரூர்!
கடந்த வாரம் திருவாரூர், நாகையில் பேசிய விஜய் தமிழக அரசு விதிக்கும் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை கிண்டலடித்து இருந்தார். மக்களின் பாதுகாப்பிற்காகவே கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என்பதை உணராமல் விஜய் பேசி இருந்தார். இப்போது அதுவே பலரின் மரணங்களுக்கு காரணமாகிவிட்டது.
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் 40 பேர் வரை பலியானதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 31 பேர் மரணம் உறுதி செய்யப்பட்ட நிலையில், அதிகாரபூர்வ பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 6 குழந்தைகள் பலியானதாக கூறப்படுகிறது.
பலர் ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்டதால், கரூர் அருகே உள்ள மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க, அமைச்சர் அன்பில் மகேஸ் முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தற்போது தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் கரூரில் விரைந்துள்ளார்.
கரூர் தவெக கொடூரம்
கடந்த வாரம் திருவாரூர், நாகையில் பேசிய விஜய் தமிழக அரசு விதிக்கும் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை கிண்டலடித்து இருந்தார். அதில், நமது பிரச்சார பயணத்தை பார்த்து, சனிக்கிழமை மட்டும் ஏன் என்று கேட்கிறார்கள். வார இறுதி நாட்களில் மக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல், ஓய்வு நாட்களில் மக்களை சந்திக்க வேண்டும் என்று திட்டமிட்டு, சனிக்கிழமையில் மட்டுமே பிரச்சார பயணத் திட்டத்தை வகுத்தோம்.
மேலும், அரசியலில் இருந்து சிலருக்கு ஓய்வு கொடுக்கவும், மக்களை சந்திக்க அதிகளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இடத்தை தேர்வு செய்து கொடுத்தால், அனுமதி அளிக்க மறுக்கின்றனர். அதற்கான காரணங்கள் எல்லாம் சொத்தாக உள்ளது. 5 நிமிடங்கள், 10 நிமிடங்கள் தான் பேச வேண்டும் என்கிறார்கள்.
ஆனால் நான் பேசுவதே 3 நிமிடங்கள் தான். அதிலும் “இதைக் பேசக் கூடாது, அதை பேசக் கூடாது” என்றால், நான் எதைத்தான் பேசுவது?
நான் தெரியாமல் தான் கேட்கிறேன்: சி.எம் சார், ஒரு ஆர்.எஸ்.எஸ் தலைவரோ, பிரதமரோ, உள்துறை அமைச்சரோ இங்கே வந்தால் இப்படிச் கட்டுப்பாடு போடுவீர்களா? அரசு இப்படியே கட்டுப்பாடு விதித்தால், அவர்களிடம் இனி கேட்க மாட்டோம். இனி மக்கள் கிட்டதான் அனுமதி கேட்போம், என்று விஜய் திமிராக பேசி இருந்தார். அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை அப்போதே கிண்டலடித்து, விஜய் பேசி இருந்தார்.
விஜய் மீது கடும் விமர்சனம்
தீபாவளி நெருங்கும் நேரத்தில் விஜய் இப்படி வீக் எண்டு பயணம் செய்வது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. சினிமா நடிகர் என்பதால் அவரை பார்க்க வருவோர் அதிகரித்து வருகின்றனர். விஜய் ரசிகர்களும், ரசிக மனோபத்தோடு செயல்படுவதில்லை; ஒழுக்கமின்றி செயல்படுவதால் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. விஜயும், ரசிகர்களின் செயலை கண்டிக்காமல், அரசுதான் தங்களை ஒடுக்குவதாக புகார் அளித்து வந்தார். ரசிகர்களை தடக்க தவறியதுதான் இந்த மரணங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது. முறையாக திட்டமிடாமல் செய்யும் அவரது சினிமாத்தனம் பயணமே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.