மக்கள் செத்துட்டாங்க.. பதில் சொல்லுங்க விஜய்.. செய்தியாளர்கள் கேட்க கேட்க.. நிற்காமல் விரைந்த விஜய்!
திருச்சி விமான நிலையதில் செய்தியாளர்களை சந்திக்காமல் விஜய் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மரணங்களுக்கு இதுவரை ஒரு இரங்கல் போஸ்ட் கூட விஜய் செய்யவில்லை. அவரின் இந்த செயல் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
கரூரில் நடிகர் விஜய் நடத்திய தமிழக வெற்றிக் கழக கூட்டம் மிகப்பெரிய அசம்பாவிதமாக மாறி உள்ளது. மிகப்பெரிய துயரம் அங்கே அரங்கேறி உள்ளது. மக்கள் கொத்து கொத்தாக பலியாகி வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் 50 பேர் வரை பலியாகி உள்ளனர். கிட்டத்தட்ட 40 பேர் மரணம் உறுதி செய்யப்பட்ட நிலையில் அதிகாரபூர்வ பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வில் 10 குழந்தைகள் பலியானதாக கூறப்படுகிறது.
பலர் ஆம்புலன்சில் கொண்டு வரப்படுவதால் கரூர் அருகே உள்ள மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க, அமைச்சர் அன்பில் மகேஸ்க்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தற்போது தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் கரூர் விரைந்துள்ளார்.
செந்தில் பாலாஜி விளக்கம்
தவெக கூட்ட நெரிசலில் சிக்கி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரிடம் எந்தக் கட்டணமும் வாங்காதீர்கள், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறியுள்ளோம். நாமக்கல், சேலம் மாவட்டங்களில் இருந்தும் கூடுதல் மருத்துவர்களை உடனடியாக வரச் சொல்லி இருக்கிறோம், என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் வேகமாக வீட்டிற்கு திரும்புகிறார்
ஆனால் விஜய் கரூரில் மக்களை சந்திக்கவோ, இரங்கல் தெரிவிக்கவோ, தொண்டர்களை மருத்துவமனைக்கு அனுப்பி உதவி செய்யவோ நினைக்கவில்லை. இந்த மரணத்திற்கு இதுவரை ஒரு இரங்கல் போஸ்ட் கூட விஜய் செய்யவில்லை.
ஆனால் அவசரமாக அவர் சென்னை விரைகிறார். இதற்காக அவர் திருச்சி விமான நிலையத்திற்கு விரைந்து உள்ளார். திருச்சி விமான நிலையதில் செய்தியாளர்களை சந்திக்காமல் விஜய் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்களை சந்திக்காத விஜய்
அங்கே செய்தியாளர்கள் விஜயிடம்: “சார்.. மக்கள் பலியாகி இருக்கிறார்கள் விஜய்.. பலர் செத்துட்டாங்க.. செய்தியாளர்களை பாருங்க.. எங்களிடம் பதில் சொல்லுங்க” என்று கேள்வி எழுப்பினர்.
ஆனால் விஜய் அவர்களை கண்டுகொள்ளாமல் முகத்தை திருப்பிக்கொண்டு சென்றார். மக்கள் செத்துட்டாங்க விஜய்.. பதில் சொல்லாமல் போனால் என்ன நியாயம் என்று மீண்டும் கேள்வி எழுப்பினர். ஆனால் விஜய் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து கிளம்பி சென்றார். அவரது இந்த செயல் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
எடப்பாடி இரங்கல்
கரூரில் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்றும், அதிமுக சார்பில் எம்.ஆர். விஜயபாஸ்கரை நேரடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று உதவிகளை வழங்க பணித்துள்ளேன் என்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.