தொடர் விடுமுறை எதிரொலி: விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் போக்குவரத்து நெரிசல்

காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறையின் காரணமாக, சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் குடும்பம் குடும்பமாக கார் மற்றும் பிற வாகனங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் புறப்பட்டனர். இதனால், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதற்கு பதிலாக, வாகனங்கள் எளிதில் கடக்க 2 கூடுதல் வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டன. மொத்தம் 9 வழித்தடங்களில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தாலும், 30 நிமிடங்கள் காத்திருக்கும் நிலை உருவானது.

நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் மாலை 4 மணி வரை சுமார் 32 ஆயிரம் வாகனங்கள் விக்கிரவாண்டி சுங்கச் சாவடியை கடந்து சென்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. வழக்கமாக ஒரு நாளில் 24 ஆயிரம் வாகனங்கள் கடக்கும் நிலையில், கூடுதலாக 8 ஆயிரம் வாகனங்கள் சென்றுவிட்டன. குறிப்பாக, நள்ளிரவு 12 மணியளவில் வாகனங்கள் 40 ஆயிரத்தை கடந்தது.

Facebook Comments Box