கரூர் விபத்து தாக்கம் | பாடமாக முதலுதவி – நிர்மலா சீதாராமனிடம் எஸ்.ஆர். சேகர் கோரிக்கை

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், முதலுதவி சிகிச்சை குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் பொருட்டு, மத்திய மற்றும் மாநில பாடத்திட்டங்களில் முதலுதவியை ஒரு தனி பாடமாக சேர்க்க வேண்டும் என்று பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இதைச் தொடர்பாக சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்ட பதிவில்,

“கரூர் கூட்ட நெரிசல் மரணத்தில் உயிரிழந்த 41 பேரில் 39 பேர் மருத்துவமனைக்கு வரும்போதே இறந்திருந்தனர். காரணம் அங்கு முதலுதவி வழங்கப்படாதது, அல்லது அதைப் பற்றி அறிவுடையோர் இல்லாதது.

விபத்து நிகழ்ந்த பின் முதல் ஒரு மணி நேரம் ‘கோல்டன் ஹவர்’ எனப்படுகிறது. அந்த நேரத்தில் தரப்படும் முதலுதவி உயிரைக் காப்பாற்றவோ அல்லது கடுமையான காயத்திலிருந்து தப்பிக்கச் செய்யவோ உதவும்.

ஆனால் நம் நாட்டில் முதலுதவி பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றோருக்கு மட்டும் வழங்கப்படுகிறது. சாதாரண மக்களுக்கு இது கற்றுக் கொடுக்கப்படுவதில்லை.

அங்கு முதலுதவி தெரிந்தவர்கள் இருந்திருந்தால், உடனடி சிகிச்சை அளித்து 39 பேரையும் காப்பாற்றியிருக்க வாய்ப்பிருந்தது.

எனவே, முதலுதவி குறித்த விழிப்புணர்வு நூலை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வழங்கி, மாணவர்கள் கட்டாயமாகக் கற்கும் வகையில் மத்திய, மாநில பாடத்திட்டங்களில் இதை பாடமாக சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறேன்,” என்று எஸ்.ஆர். சேகர் தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box