ராமதாஸுடன் சி.வி.சண்முகம் திடீர் சந்திப்பு

திண்டிவனத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கடந்த வாரம் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்திருந்தார்.

இதன்பின்பு, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தைலாபுரத்திற்கு சென்று பாமக நிறுவனர் ராமதாஸிடம் தனது குடும்பத்துக்கான திருமண அழைப்பை வழங்கினர். அதன் பின்னர், இருவரும் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர்.

பாமக தரப்பில் இதை குறித்து கூறியதாவது: “இருவரும் தமிழகம் அரசியல் நிலவரம் மற்றும் ஆட்சி மாற்றம் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் விருப்பப்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இடம் பெற வேண்டும் என்று சி.வி.சண்முகம் முன்வைத்தார்” என தெரிவித்தனர்.

Facebook Comments Box