கரூர் துயரம்: பாஜக சதியை முறியடிக்க காங்கிரஸுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

‘கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவத்தில், பாஜகவின் சதியை முறியடிக்க காங்கிரஸ் தலையீடு அவசியம்’ என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “கரூர் சம்பவத்தை மாற்றும் முயற்சியில், பாஜக எம்.பி.-க்கள் குழு அமைத்து ஆய்வு செய்து வருகிறது. எனவே, பிற மாநில எம்.பி.-க்கள் கொண்ட குழுவை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி நியமித்து, அவர்களை கரூருக்கு அனுப்ப வேண்டும். பாஜகவின் சதியை முறியடிக்க, காங்கிரஸ் கட்சியின் தலையீடு உடனடி தேவையாக உள்ளது”.

திருமாவளவன் மேலும் கூறியது: *“கரூர் துயரை தேர்தல் வரை பயன்படுத்தி அரசியல் செய்யும் முயற்சிகள் பாதிக்கப்பட்டோருக்கு எதிரான துரோகம். எந்த காரணத்தையும் கூறினாலும், தவெக தலைவர் விஜய் இந்த சம்பவத்திற்கு தார்மிகப் பொறுப்பேற்க வேண்டும். கட்சியின் தலைவர் என்ற முறையில், தன்னைத் தேடி வரும் நபர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் தனக்குப் பொறுப்பு இருக்கிறது என்பதை உணர வேண்டும்.

காவல் துறை மற்றும் தமிழக அரசு பொறுப்பேற்காமல் ஓடிவிட முடியாது. அறிவிப்பின் நேரத்தில் 8 மணி நேரம் மக்களை ஒரே இடத்தில் காத்திருக்க வைப்பது கொடுமை. இதை விஜய் உணர வேண்டும். இனிமேல் காலம் தாழ்ந்து நிகழ்வுகளில் பங்கேற்கக்கூடாது என்பதை தலைவர்களுக்கு கரூர் சம்பவம் உணர்த்தியுள்ளது. விஜய் காலம் தாழ்த்தியதற்கு அவருடன் இருந்தவர்கள் காரணமாக இருந்ததை யாரும் மறுக்க முடியாது”.

Facebook Comments Box