விஜய்யை கைது செய்ய கோரி ஒட்டப்பட்ட போஸ்டர்களை கிழித்த மக்கள்
கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, வடலூர் நான்குமுனை சந்திப்பு மற்றும் கடைவீதியில் “விஜயை கைது செய்ய வேண்டும்” என்று தமிழ்நாடு மாணவர்கள் சங்கம் என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அந்த போஸ்டர்களில், விஜயை “அப்பாவி உயிர்களை பலிகொண்ட அரசியல் தற்கொடியாளன்” என்று குறிப்பிடப்பட்டு, அவரை கொலை குற்றவாளியாக கைது செய்ய வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது.
ஆனால், நேற்று அந்த போஸ்டர்களை கல்லூரி மாணவிகள் கிழித்தெறிந்தனர். பின்னர், அவர்களுக்கு ஆதரவாக ஏராளமான இளைஞர்களும் வந்து சேர்ந்து, போஸ்டர்களை கிழித்து அகற்றினர்.
Facebook Comments Box